விடுதலை படத்தில் நடித்ததால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக அப்படத்தில் நடித்த நடிகை பவானி ஸ்ரீ கூறியுள்ளார்.

வெற்றி படம்

காமெடியனாக பிரபலமான நடிகர் சூரி, விடுதலை பார்ட் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விடுதலைப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜிவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படமானது, கடந்த மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருந்த விடுதலை திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷின் தங்கை ஆவார். முதல் படத்திலேயே இவரது அபாரமான நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி இருந்தனர்.

போன் செய்து பேசினார்

நடிகை பவானி ஸ்ரீ தனக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பைப் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடமிருந்து போன் வந்தது. ஒரு சின்ன ரோல் இருக்கு. செய்ய விருப்பமா? என்று கேட்டார். நான் அப்படியே ஆடிப் போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான இயக்குநர் சின்ன கேரக்டர்கள் கூட அழுத்தமாக எழுதக்கூடியவர். அவரிடம் இருந்து போன் வந்தவுடன் ஒரு மணி நேரத்திலேயே அவரது அலுவலகத்திற்கு சென்றேன். உங்களுடைய கேரக்டர் பற்றி இப்போ சொல்ல மாட்டேன். நீங்கள் ஸ்பாட்டுக்கு வாங்க என்று சொன்னார்.

மனஅழுத்தம் ஏற்பட்டது

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் காட்சியையும், எதிர்பார்ப்பையும் விளக்கிச் சொல்லும்போது, நாம் எப்படி அந்த காட்சியில் பேசி நடிக்க வேண்டும் என்று தெரிந்துவிடும் என்று கூறினார். நிறைய விஷயங்களை அவர் கற்றுக் கொடுத்தார். மேலும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை எடுத்துச் சொன்னார். அவர்கள் பட்ட பல துன்பங்களையும், துயரங்களையும் கூறினார். இப்போது கூட எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதெல்லாம் எடுத்துச் சொன்னார். மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மனவலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம் என்பதை எனக்குச் சொன்னார். போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா? என்று சித்திரவதை காட்சிகளின் நடித்தபோது தான் தெரிந்தது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. மேலும் கிளிசிரின் இல்லாமல் அப்படத்தில் நான் அழுது நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here