லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடிகை மைனா நந்தினி இணைந்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

விறுவிறுப்பான ஷூட்டிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. காஷ்மீரில் சூட்டிங் நடைபெற்ற பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

இணைந்த மைனா

லியோ படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் இணைந்த விஜய் காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், தற்போது படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை மைனா நந்தினி இப்படத்தில் இணைந்துள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here