இன்று பிறந்த நாள் கொண்டாடும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஹீராவான நடிகர் பிரஷாந்துக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அஜித்துக்கு போட்டி

பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக திறமையாளர் தியாகராஜனின் மகனான பிரஷாந்த், ஏப்ரல் 6ஆம் தேதி 1973 ஆம் ஆண்டு பிறந்தார். 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். செம்பருத்தி படத்தின் மூலம் பல ரசிகர்களை தனதாக்கிக் கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது சினிமா வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது. திருடா திருடா, ஆணழகன், கல்லூரி வாசல், கிருஷ்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பிரசாந்திற்கு, 1998 ஆம் ஆண்டு சூப்பர் ஜாக்பாட் ஒன்று அடித்தது என்றே சொல்ல வேண்டும். ஜீன்ஸ் படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரசாந்துக்கு கிடைத்தது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்திற்குப் பிறகு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நாயகனாக மாறிய பிரசாந்த், சாக்லேட் பாயாக சினிமா துறையில் வலம் வந்தார்.

ஜாக் பாட்

ஜீன்ஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்த பிரஷாந்த், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை, பூமகள் ஊர்வலம், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களில் தடித்து விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு டஃப் பைட் கொடுத்து வந்தார். ஆனால் தனது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த பிரசாந்த் சினிமாவிலும் அடுத்தடுத்து பல தோல்வி படங்களை கொடுக்கும்படி ஆனது. ஜெய், ஷாக், ஆயுதம், லண்டன், தகப்பன்சாமி என்று தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்தார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய பிரேக்கில் இருந்த பிரசாந்த் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பல முன்னணி தயாரிப்பாளர்கள் பெற நினைத்தும், அதனை தியாகராஜன் வெற்றிகரமாக பெற்றார். கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பிரசாந்த் இப்படத்தில் ஹீரோவாக மீண்டும் நடிக்க துவங்கினார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்தகன் திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here