அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

மிஷன் சாப்டர் 1

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1 ‘. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

உரிமம் பெற்ற நிறுவனம்

இந்நிலையில் ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here