ஹிந்தி திரையுலகில் பல விஷயங்கள் இல்லை என லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

ஹிட் படங்கள்

பழனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

லிஸ்ட் போட்ட காஜல்

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் ஹிந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில் தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. தென்னிந்திய சினிமா துறையில் நட்புறவுடன் கூடிய நல்ல சூழ்நிலை உள்ளது. அங்கு திறமையான இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய படங்களில் நல்ல கதையம்சம் உள்ளது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் ஹிந்தியில் இல்லை” என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால். இதை கேட்ட காஜல் ரசிகர்கள் அவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here