மும்பையில் உள்ள ஒரு ஜிம்மில் தீபிகா படுகோனை சந்தித்த ஐஸ்வர்யா மேனன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

வெற்றி வேண்டும்

காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன், ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழியிலும் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கில் ‘ஸ்பை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பல தமிழ் படங்களில் நடித்திருந்தும் சரியான வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. தனக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுக்க கதைகள் கேட்டு வரும் ஐஸ்வர்யா மேனன். மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு சென்று இருக்கிறார்.

செல்ஃபி புள்ள ஐஸ்வர்யா

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு சென்று இருக்கும் ஐஸ்வர்யா மேனன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய தீபிகா படுகோனை ஜிம்மில் சந்தித்துள்ளார். தீபிகாவை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா துள்ளி குதித்து அவருடன் ஜிம்மிலேயே செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டார். அந்த செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு “முதல் முறையாக ஒரு பெண் மேல் நான் காதலில் விழுந்த தருணம்.. ஐ லவ் யூ” என்று கூறி தீபிகாவை டேக் செய்தும் உள்ளார் ஐஸ்வர்யா. இதைப் பார்த்த ரசிகர்கள் பல ஹார்ட்டின்களையும், இமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர். பல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், ஒரு ரசிகர் தீபிகாவை விட நீங்கள் தான் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட்டு பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாவில் மட்டும் 2.9 மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here