அஜித்குமார் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

முதல் ஹிட்

1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில், சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் அமராவதி. இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அஜித் குமார் இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். கல்யாண் குமார், கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள். அஜித் தற்போது பல ஹிட் படங்களை கொடுத்தாலும், ஆரம்ப காலத்தில் இவர் கொடுத்த ஹிட் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் அஜித் நடிப்பால அமராவதி திரைப்படம் அபாரமான வெற்றியை பெற்றது.

டிஜிட்டல் அமராவதி

அமராவதி வெற்றிக்கு பிறகு பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது. அமராவதி திரைப்படம் டிஜிட்டலில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும் இப்படமானது மே மாதம் முதல் தேதியான அஜித்குமாரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. எப்பொழுதும் அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான முதல் படம் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வெளியிடும் தகவல் தெரிந்த அஜித்தின் ரசிகர்கள் மேலும் கொண்டாட்டத்தில் உள்ளனர். டிஜிட்டல் செய்யப்பட்ட அமராவதி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here