மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

வெற்றி திரைப்படம்

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், திரையரங்குகளில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. கர்காட்டகாரன் திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விரைவில் ஷூட்டிங்

கரகாட்டக்காரன் படத்தில் இளையராஜாவின் இசையும், கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளாவின் காம்போவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகை கனகாவின் முதல் படமான கரகாட்டக்காரன் இன்றும் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெங்கட் பிரபு ரீமேக் செய்யப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் அப்போது மறுத்த நடிகர் வெங்கட் பிரபு, தற்போது அதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தனது தந்தை கங்கை அமரனிடம் வெங்கட் பிரபு அனுமதி வாங்கிவிட்டதாகவும், அதனால் இப்படத்தின் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோ

கரகாட்டகாரன் படத்தில் மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு பதிலாக இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்றும் தகவல் வந்துள்ளது. இந்த தகவல்களை கேள்விப்பட்டதிலிருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here