பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோவான கீயானு ரீவ்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஜான் விக் 4ம் பாகம் திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுமார்

உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ஜான் விக் 4 திரைப்படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜான் விக் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நான்காம் பாகமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த படங்களுக்கு இந்தியாவில் பெரும் அளவில் ரசிகர்கள் இல்லை என்றாலும், ஹாலிவுட் படங்களை ரசிக்கும் தமிழர்கள் வழக்கம்போல் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்விக் 4 திரைப்படம் முதல் நாளில் ரூ.2.5 கோடி மட்டும் வசூல் செய்துள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த படம் வசூல் வேட்டை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் வேட்டை

கீயானு ரீவ்ஸ், டோனி யென் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் 30 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வார முடிவில் 70 மில்லியன் டாலர் வரை இந்த படம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here