லிப்ட், டாடா போன்ற ஹிட் படங்களை கொடுத்ததால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் டாப் நடிகைகளை நடிக்க வைக்க இயக்குநர்களிடம் கேட்கிறாராம் கவின்.

நடிகைகளுடன் பேச்சுவார்த்தை

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சமீபத்தில் வெளியான டாடா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், ரசிகர்கள் ஆதரவு கொடுத்து இருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நயன்தாரா தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் கவின். அதுமட்டுமில்லாமல் கவின் நடிக்கப்போகும் அடுத்தடுத்து படங்களுக்கு முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடிக்கும் எண்ணத்தில் தனக்கு ஏற்ற கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் டாப் ஹீரோயின்களை போடும்படி கவின் கேட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

டாப் லிஸ்டில் வரும் முயற்சி

சிவகார்த்திகேயனும் ஆரம்ப காலகட்டத்தில் சில ஹிட் படங்களை கொடுத்த பிறகு கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட டாப் நடிகைகளை தனது படங்களுக்கு ஒப்பந்தம் செய்யும்படி கூறியதாக கூறப்பட்டது. அதனால் தான் சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு டாப் நடிகைகளை நடிக்க வைத்ததாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தது. தற்போது சிவகார்த்திகேயன் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பதால், ஆரம்ப கட்டத்திலேயே டாப் நடிகைகளுடன் ஜோடி சேர வேண்டும் என்றும் அப்போதுதான் முன்னணி ஹீரோவாக முடியும் என்ற எண்ணத்தில் கவின் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் நிலவு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here