நடிகை சமந்தா மார்டன் உடையில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

சாகுந்தலம் ப்ரோமோஷன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பலரின் கவனத்தை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த சாகுந்தலம் திரைப்படம், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது.

தரமான சம்பவம்

தீவிரமான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகை சமந்தா. அடிக்கடி தனது படத்தின் போஸ்டர்களையும், போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார். அந்த வகையில் தற்போது சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மார்டன் உடையில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கு மட்டும் இரண்டு லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் குவிந்து வருகின்றது. இதை பார்த்த பல முன்னணி நடிகைகளும் ஷாக்கில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் ஒரு கிசுகிசுக்கள் நிலவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here