சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அருவி” என்ற தொடரில் நடித்து வரும் லாவண்யா தேவியின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குணச்சித்திர நடிகை

பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் லாவண்யா. வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் லாவன்யா. அதன்பிறகு பத்ரி, தெனாலி, படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குவியும் வாழ்த்துக்கள்

தனது 44ஆவது வயதில் திருமணம் செய்துகொண்ட லாவன்யாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். பிரசன்னா என்பவரை திருமணம் செய்துகொண்ட லாவன்யாவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லையா? இப்பொழுதுதான் திருமணம் செய்து கொள்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் லாவண்யாவின் திருமண புகைப்படத்தை லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர். சுயம்வரம், ஜோடி, சங்கமம், சேது, தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் லாவண்யா. சமீபத்தில் வெளியான பகாசுரன் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here