தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; “தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு – மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை

நாளை (மார்ச் 22) முதல் மார்ச் 25 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்ச 33 – 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 – 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here