பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை ஆஷா சரத் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

மகளின் திருமணம்

பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஆஷா சரத். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் உத்தாரா 2021 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டத்தை வென்றார். கடந்தாண்டு வெளியான கெத்தா படத்தின் மூலம் நடிகையாகவும் அவர் அறிமுகமானார். இந்நிலையில் உத்தாராவுக்கும், ஆதித்யா மேனன் என்பவருக்கும் மார்ச் 18 ஆம் தேதி கொச்சியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் மலையாள நடிகையான காவியா மாதவன், நடிகர் லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மிரட்டும் போலீஸ்

மகளின் திருமண வீடியோவை ஆஷா சரத் தனது யூட்டியூப் சேனலில் பகிர்ந்துள்ள நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியான திருஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய ஆஷா சரத்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், அதன் தமிழ் ரீமேக் படமான பாபநாசம் படத்திலும் அவரே போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆஷா சரத் கமலஹாசனுடன் தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here