நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஆக்ஷன் படங்கள்

கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வங்கியில் நடக்கும் மோசடிகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து. தற்போது மகிழ் திருமணி இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை, துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஆக்ஷன் படங்களாக அமைந்தது. தற்போது இவர் நடிக்கப் போகும் ஏகே 62 படமும் ஆக்சன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ரொமான்டிக் டூர்

அடிக்கடி பைக் எடுத்துக்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாக உலகத்தை சுற்றி வந்த நடிகர் அஜித்குமார், சமீபத்தில் தனது மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக் டூர் சென்றுள்ளார். அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. எப்பொழுதும் தனது நண்பர்களுடன் பைக் மற்றும் காரில் சுற்றுலா மேற்கொண்டு வந்த நடிகர் அஜித் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். இதில் நடுக்கடலில் அஜித் மற்றும் ஷாலினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அப்டேட் கிடைக்குமா

AK 62 படம் குறித்த அப்டேட் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில், தங்களது டூர் போட்டோஸ் வெளியிட்டு ஷாக்கிங் ட்ரீட் கொடுத்துள்ளார் ஷாலினி. ஏகே 62 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம், தற்போது பொன்னியின் செல்வன்2 மற்றும் லால் சலாம் படத்தில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த படங்களுக்குப் பிறகுதான் அஜித்தின் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here