சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் பத்து தல படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது.

ரீமேக் படத்தில் சிம்பு

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் பத்து தல. சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால், அதன்பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு மட்டும் இல்லாமல் சிம்பு ரசிகர்களும் அவரது வெற்றியை கொண்டாடி வந்த நிலையில், பத்து தல படத்திற்காக நீண்ட நாட்களாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம். கன்னடத்தில் இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

சாதனை படைத்த பத்து தல

இந்நிலையில் பத்து தல படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.ீந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளிவந்த படத்தின் டிரெய்லர்களில் முதன்முறையாக புதிய சாதனையை இந்த படம் படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் 32 மில்லியன் பார்வைகளையும், பீஸ்ட் மற்றும் துணிவு டிரெய்லர்கள் 30 மில்லியன்களையும், வலிமை பட டிரெய்லர்ர் 17 மில்லியன்களையும் பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இப்போது பத்து தல ட்ரெய்லர் 15 மில்லியன்களை பெற்று டாப் 5 இடத்தை பிடித்துள்ளது. வரும் 30ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here