விஜய் டிவியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர் தீனா தற்போது தனது சொந்த ஊரான திருவாரூரில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். “ஒரு வீடு சுவர்கள் மற்றும் விட்டங்களால் செய்யப்படுகிறது. காதல் மற்றும் கனவுகளுடன் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. என்னுடைய பூர்வீகத்தில் கனவு வீடு கட்டி விட்டது” என்று தன்னுடைய கிரகப்பிரவேச புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும், தன்னுடைய பிரமாண்டமான வீட்டின் புகைப்படத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். புதிதாக வீடு கட்டியுள்ள தீனாவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here