நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாராவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பன்முகத்திறமையாளர்

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமா துறைக்கு அறிமுகமான விஜய் ஆண்டனி ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ளார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், தமிழ் சினிமாவை மிரட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த வெற்றிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரின் மார்க்கெட்டையே திருப்பி போட்டது, சசி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்குப் பிறகு சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என்று பல படங்களில் நடித்த விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றது.

விஜய் ஆண்டனியின் மகள்

இவரது நடிப்பில் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. பிச்சைக்காரன் 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய சசியே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே சினிமாத்துறையில் பல பரிமாணங்களை கொண்டுள்ள விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் குடும்பத்தை பற்றிய தகவல்களை வெளியே அதிகம் பகிராமால் இருந்த விஜய் ஆண்டனியின் மகள் லாராவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here