தனது அடுத்த படத்தின் விவரத்தை வெளியிடும் வகையில் போட்டோஷூட் நடத்தி அப்டேட்டும் கொடுத்துள்ளார் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி.

ஜேடி ஜெர்ரி இயக்கிய தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வெற்றி பெற்றது.

தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த லெஜண்ட் அண்ணாச்சி சினிமாவில் நடிக்க முடிவு செய்து தி லெஜன்ட் படத்தை தயாரித்தார்.

OTTயில் வெளியான பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறி சாதனையும் படைத்தது தி லெஜண்ட் திரைப்படம்.

சந்தோஷத்தில் இருக்கும் அண்ணாச்சி கூடிய விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளிவந்தது.

இப்போது அதற்கான அறிவிப்பை போட்டோஷூட் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் அண்ணாச்சி. ப்ளாக், ஆரஞ்சு நிற கோட் சூட்டில் புகைப்படங்களை வெளியிட்டதுடன் “New Transition…Details Soon” என்று பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here