‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

புகைப்பட கண்காட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற பெயரில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் சென்னையில் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என்று பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ரஜினி பாராட்டு

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தார். ரஜினிகாந்துக்கு கண்காட்சியை சுற்றிக் காண்பித்த அமைச்சர் சேகர்பாபு புகைப்படங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். இந்த கண்காட்சி பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது; “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கைப் பயணம் கிட்டதட்ட 54 வருடங்கள் கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அது மக்கள் அவரது உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரம். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். முதலமைச்சருடனான நினைவுகள் நிறைய இருக்கிறது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன்” என்றார் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here