கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான அப்டேட்

1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன் 2-வது பாகமான இந்தியன் 2 படத்தை இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு, பல வகைகளில் பிரச்சனைகள் வந்தது. பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2 படத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில், படப்பிடிப்பு தளத்தில் தனது டீமை வேலை வாங்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது.

அடுத்த அப்டேட்

பல பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 4 ஆண்டுகளாக இந்த படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சூட்டிங் நடந்து கொண்டிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சின்ஷா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் தனது டீமை வேலை வாங்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட் ஆக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் கமலஹாசன் சண்டை பயிற்சி குழுவினருடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here