ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்.

அழுத்தமான கதாபாத்திரம்

ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையிலும், ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

விரைவில் அடுத்த அறிவிப்பு

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தை Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். நடிகை லைலா இப்படத்தில் இணைந்தது குறித்தான அறிவிப்பு போஸ்டர், இணைய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு மூணாறில் முடிவடைந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here