ராஜா ராணி 2 தொடரில் பிரபலமான நடிகை ரியா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளார்.

மாற்றப்பட்ட நடிகைகள்

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் ராஜா ராணி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ராஜா ராணி சீசன் 1 வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது. இந்த தொடரில் ஆரம்பத்தில் சந்தியா என்ற முதன்மை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு ரியா விஸ்வநாதன் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த இந்த தொடரில் இருந்து திடீர் என்று ரியாவும் மாற்றப்பட்டார். இந்நிலையில் நடிகை ரியா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக சில தினங்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ரியாவின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆஷா கௌடா நடித்து வருகிறார்.

புதுவரவு

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியல் ரியா தோன்றவுள்ளார். சூப்பர் ஹிட் படமான ‘சண்டக்கோழி’ என்ற பெயரில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. ராஜா ராணி 2 தொடரில் இருந்து ரியா மாற்றப்பட்டவுடன் ஷாக்கான ரசிகர்கள், அவர் வேறு எந்த தொடரில் நடிப்பார் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். விஜய் டிவிக்கு இணையாக ஜீ தமிழில் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில், விஜய் டிவியில் இருந்து விலகிய நடிகை ரியா, தற்போது ஜீ தமிழில் இணைந்து புதிய தொடரில் நடிப்பது அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இந்தத் தொடரும், அதில் இவரது கதாபாத்திரமும் அனைவரையும் வெகுவாக கவரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here