பிக் பாஸில் பிரபலமான விக்ரமனும், நடிகர் ஆரியும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நல்ல வரவேற்பு

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு முறையும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

ஒன்று சேர்ந்த போட்டியாளர்கள்

கடைசியாக 6-வது சீசனில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்ரமன். அரசியல்வாதியாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில், சகல போட்டியாளர்களுடன் மிகவும் சகஜமாக பழகி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இறுதியில் இவர் தான் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென்று அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், சிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு டைட்டில் வென்ற நடிகர் ஆரியை, விக்ரமன் சந்தித்துள்ளார். சமூக கருத்துகளை பேசி வந்த நடிகர் ஆரியும், அதேபோல் பிக் பாஸ் வீட்டில் சமூக கருத்துக்களைப் பேசி வந்த விக்ரமனும் சந்தித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here