பத்து தல படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

டான் சிம்பு

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் பத்து தல. நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால், அதன்பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிம்பு மட்டும் இல்லாமல் சிம்பு ரசிகர்களும் அவரது வெற்றியை கொண்டாடி வந்த நிலையில், பத்து தல படத்திற்காக நீண்ட நாட்களாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம்.

ஹாட்ரிக் வெற்றி

கன்னடத்தில் இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தமிழிலும் அதே அளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கௌதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். Youtube-ல் 10 மில்லியன் பார்வையாளர்களை பத்து தல டீசர் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்து தல படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இயக்குநர் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், படத்தின் சூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இறுதி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பத்து தல திரைப்படம் மட்டும் சிம்புவுக்கு வெற்றி பெற்றால், ஹாட்ரிக் வெற்றி பெற்ற சிம்பு என்று அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here