விதவிதமான கெட்டப்புகளை போட்டு அசத்தி வரும் குத் வித் கோமாளி புகழ் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடமிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

புகழ் அலப்பறை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், அதன் நான்கு சீசன்களில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். கடந்த வாரம் காந்தாரா கெட்டப் போட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்த புகழ், இந்த வாரம் பெண் வேடம் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற புகழ், சமீப காலமாக சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியுடன் இணைந்து சேட்டைகள் செய்யும் புகழ், தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

பெண் வேடம்

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய நிலையில், தற்போது புகழ் செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காந்தாரா கெட்டப் போட்டு வந்த புகழ் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றார். இந்த வாரம் பெண் வேடமிட்டு அனைவரையும் ஷாக்காகியுள்ளார் புகழ். கருப்பு நிற சேலை அணிந்து பார்க்க அசல் பெண் போலவே மாறியுள்ள புகழ், பலரில் கவனத்தை கவர்ந்து உள்ளார்.

மகிழ்விப்பேன்

“மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யாரென்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி, இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும் நன்றிகளும், என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவளித்து வரும் என் உயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என புகழ் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து கேப்ஷன் போட்டுள்ளார். இவர் சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம், அஜித்துடன் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here