பாக்கியா கார் ஓட்டுவதை பார்த்து கோபி மிரண்டு போய் நிற்கும் வகையிலான பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரோமோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வெற்றி பெரும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இது பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்கியா. அடிக்கடி பல ட்விஸ்ட்களை கொடுத்து வரும் இந்த சீரியல், தற்போதும் ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை எதிர்நோக்கி நகர்கிறது.

சாதிக்கும் பாக்கியா

ராதிகா வேலை செய்யும் கம்பெனியின் கேன்டீன் ஆர்டரை பாக்கியா பெறுகிறார். ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்தது மட்டும் இல்லாமல், பாக்கியாவின் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார். அதன்பிறகு பாக்கியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் கோபிக்கு, அடுத்தடுத்து வாழ்க்கையில் அடி மேல் அடி விழுகிறது. பாக்யாவின் இளைய மகன் எழில் மற்றும் மூத்த மருமகள் ஜெனி மற்றும் வீடு வேலை செய்யும் செல்வி துணையோடு பாக்கியா பல சாதனைகளை செய்து வருகிறார். சமீபத்தில் ராதிகாவின் கேன்டீன் ஆர்டரை பெற்ற பாக்கியா. சமைப்பதற்கு பாத்திரங்களை பெரிய வண்டியில் ஏற்றி வருகிறார்.

மிரண்டு போன கோபி

வீட்டு வாசலில் மூத்த மகன் செழியனின் கார் நின்று கொண்டிருக்க, எப்படி சமையல் பாத்திரங்களை உள்ளே கொண்டு செல்வது என்பதை தெரியாமல் முழிக்கின்றனர். அப்போது காரின் சாவியை எழில் கொண்டு வந்து காரை நான் ஓரமாக நிறுத்துகிறேன் என்று சொல்லும் பொழுது, பாக்கியா நானே நிறுத்துகிறேன் என்று வண்டி சாவியை வாங்கி காரை ரிவர்ஸ் எடுத்து ஓட்டுகிறார். அந்த சமயத்தில் ராதிகா கோபியிடம் காய்கறிகளை வாங்கச் சொல்லி அனுப்புகிறார். காய்கறிகளை வாங்கி வரும் கோபி, பாக்யா கார் ஓட்டுவதை கண்டு மிரண்டு போகிறார். கோபியுடன் இருக்கும் பொழுது இடியட் இடியட் என்று பாக்கியாவை மட்டம் தட்டிய வைத்திருந்தார் கோபி. ஆனால் தற்போது ராதிகா மற்றும் கோபியை பின்னுக்கு தள்ளி, தனது ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற்று வருகிறார் பாக்கியா. இந்த எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் பாசிட்டிவ் கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here