கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான தி லெஜன்ட் திரைப்படம் OTT ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட படம்

ஜேடி ஜெர்ரி இயக்கிய தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவானது. தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த லெஜெண்ட் சரவணன், சினிமாவில் நடிக்க முடிவு செய்து தி லெஜன்ட் படத்தை தயாரித்தார். தி லெஜன்ட் படம் கடந்த ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி ரிலீஸ் ஆனது. 800 திரையரங்குகளுக்கு மேல் இந்த படம் விநியோகம் செய்யப்பட்டது. இப்படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தாலா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தி லெஜன்ட் திரைப்படம் வெளியான புதிதில் பல ட்ரோல்களை சந்தித்து இருந்தாலும், பல பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ரசிகர்கள் குஷி

இப்போதெல்லாம் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு மாதத்திற்குள் OTTயில் வந்து விடுகிறது. அந்த வகையில் அண்ணாச்சி நடித்த தி லெஜன்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களாக OTT ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவர வராமல் இருந்தது. இதைதொடர்ந்து இன்று 12.30 மணிக்கு Disney+ Hotstar OTT தளத்தில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகும் என அதிரடி அறிவிப்பை சரவணா அண்ணாச்சி வெளியிட்டார். அதன்படி 12.30 மணி அளவில் தி லெஜண்ட் திரைப்படம் Disney+ Hotstar OTT தளத்தில் வெளியானது. இதனால் குஷியில் உள்ள ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர். படம் பார்க்காத ரசிகர்கள் ஆர்வமாகவும் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here