பாக்கியலட்சுமி தொடரில் பிரபல நடிகரான ரஞ்சித் என்ட்ரி கொடுத்துள்ளதால் இந்த தொடர் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியட் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இதில் பாக்யா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்யா. அடிக்கடி பல டுவிஸ்ட்களை கொடுத்து வரும் இந்த சீரியல், தற்போதும் ஒரு முக்கியமான டுவிஸ்ட்டை எதிர்நோக்கி நகர்கிறது. ராதிகா வேலை செய்யும் கம்பெனியின் கேன்டீன் ஆர்டரை பாக்யா பெறுகிறார்.

அடுத்த ட்விஸ்ட்

ஆங்கிலம் பேச தெரியாத பாக்யாவை ராதிகா கேவலமாக பேச, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் பாக்யா. இந்த இடத்தில் பாக்யாவிற்கு உறுதுணையாக இருக்க ஒரு முக்கியமான கேரக்டர் தேவைப்படுகிறது என்பதால் ஒரு பிரபல நடிகரை இந்த தொடர் அறிமுகப்படுத்துகிறது. இத்தொடரில் புதிய வரவாக பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் நடிகர் ரஞ்சித். ஆங்கிலம் கற்பதற்காக வகுப்பில் சேரும் பாக்கியா, அரைகுறை ஆங்கிலத்தில் பேசுகிறார். அதை பார்த்து அனைவரும் சிரிக்க, பாக்யவிற்கு சப்போர்ட் செய்கிறார். இந்த தொடரில், இவரது கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் பாக்கியாவிற்கு உதவி செய்யும் கதாபாத்திரமாகவும் இருப்பதால், இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோபிக்கு அடுத்த ஆப்பு ரெடி என்றும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் வரும் ஸ்ரீதேவியை போல் இருப்பதாகவும் கமெண்டுகள் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here