ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் 80களில் பிரபலமான நடிகை ஜீவிதா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

80களில் பிரபலம்

1984 ஆம் ஆண்டு உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஜீவிதா. அதன்பிறகு சுகமான ராகங்கள், செல்வி, இளமை, நானே ராஜா நானே மந்திரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 80களில் கொடி கட்டி பறந்த நடிகை ஜீவிதா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பல வருடங்களுக்கு பிறகு

1988 ஆம் ஆண்டு வளைகாப்பு என்ற தமிழ் படத்தில் இவர் கடைசியாக நடித்தார். அதன்பிறகு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜீவிதா. 1991 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீவிதா, தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here