தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட குறித்து இன்ஸ்டாவில் பதிவவிட்டுள்ள பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

மாரடைப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுஷ்மிதா சென். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் மிஸ் யுனிவெர்ஸ் அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள சுஷ்மிதா சென், தனது உடல் நலம் குறித்து விளக்கமும் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், பலமாகவும் வைத்திருங்கள். அது தேவைப்படும் நேரத்தில் உங்களுடன் துணை நிற்கும். எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக ஆன்ஜியோபிளாஸ்ட்டி செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நன்றி

எனக்கு பலமான இதயம் உள்ளதாக எனது மருத்துவர் உறுதிப்படுத்தினார். எனக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பதிவு எனது நலம் விரும்புபவர்கள், அன்புக்கு உரியவர்களுக்கு மட்டுமே”. இவ்வாறு சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் சுஷ்மிதா. முதல்வன் படத்தில் “சக்கலக்க பேபி” என்ற பாடலில்வர் நடனம் ஆடி அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here