நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஹிட் நாயகி

1988 ஆம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கௌதமி, எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். 80களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை கௌதமி, ரஜினி காந்த், கமல்ஹாசன், ராமராஜன், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை கௌதமி. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த வருடமே அவரை விவாகரத்தும் செய்தார். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

கொள்ளை அழகு

கடைசியாக தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் என்ற படத்தில் நடித்திருந்தார் கௌதமி. நடிகர் கமல்ஹாசனும், கௌதமியும் லிவிங் டூகெதரில் 10 வருடங்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கௌதமி தற்போது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன் வசித்து வருகிறார். கௌதமியின் மகள் சுப்புலட்சுமி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் கௌதமி போலவே சுப்புவும் அழகாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் கிடைத்துவிட்டதாகவும் கமெண்ட்கள் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here