கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் வெப் தொடர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ.

வெப் தொடர்

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்துள்ளது.

ஸ்பை த்ரில்லர்

ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இன் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்சன் திரைக்காவியம் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் திரையிடப்படுகிறது. மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் சீட்டடெல் தொடரின் பரபரப்பான இரண்டு எபிசோடுகள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு, அதைதொடர்ந்து மே 26 வரை ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய எபிசோடு பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியிடப்படுவதை அறிவிக்கும் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளை பிரைம் வீடியோ நேற்று வெளியிட்டது. உலகளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகளில் சீட்டடெல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீட்டடெல் பற்றி

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த ஒரு வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோரை இயக்கிக் கொண்டிருந்தவர்களால் – அனைத்து மக்களின் பாதுகாப்பையும், பத்திரத் தன்மையையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட சிட்டடெல் எனும் இந்த சுதந்திரமான உலகளாவிய உளவு நிறுவனமானது அழிக்கப்பட்டது. சீட்டடெல் வீழ்ச்சியின்போது உயர்நிலை உளவுத்துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும், அவர்களின் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

புதிய வாழ்க்கை பயணம்

அப்போதிருந்து தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கைப் பயணத்தை மேற்கொண்டு மறைந்தே வாழ்ந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இரவு, மேசனின் உடன் பணியாற்றிய பணியாளர் பெர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லீ டுக்ஸி) ஒரு இக்கட்டான நிலையில் புதிய உலக அமைப்பு ஒன்றை நிறுவும் மாண்டிகோரின் முயற்சிகளை முறியடிக்க, மேசனின் உதவியை அவசரமாக வேண்டி, அவரைத் தேடி வருகிறார். மேசன் தன்னுடன் பணியுரிந்த பணியாளர் நதியாவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு இரகசியங்கள், பொய்கள் மற்றும் ஆபத்தான அதே சமயம் அழியாத கொழுந்துவிட்டு எரியும் காதல் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட உறவுடனான தொடர்ந்த போராட்டத்தின் நடுவே மாண்டிகோரின் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் ஒரேயொரு பணியிலக்கை நோக்கி அந்த இரண்டு ஒற்றர்களும் உலகமெங்கும் சுற்றி வரச்செய்யும் அந்தப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

சீட்டடெல் தொடர்கிறது

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் நடிப்பில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில் தோன்றும் சீட்டடெல் உலகளாவிய கிளையுரிமை அறிமுகத்தின் ஒரு திருப்புமுனையாகும். ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO நிர்வாகத் தயாரிப்பில் உருவான சீட்டடெல் மற்றும் அதன் அடுத்தடுத்த தொடர்கள் ஒன்றோடொன்று இணைந்த கதைக் களத்துடன் உலகம் முழுவதும் பயணிக்கின்றன. சீட்டடெலின் ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே படமாக்கப்பட்டது மற்றும் தனித்துவமான உலகளாவிய கிளையுரிமையை உருவாக்கும் வகையில் தலைசிறந்த திறமை மிக்க நடிகர்கள் நடித்துள்ளனர். இத்தொடர் முறையே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிப்பில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here