தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினர் திரையுலக பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி வாழ்த்து

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்”. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here