நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நடித்துள்ள “ஃபுபார்” வெப் தொடரின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது நெட்ஃபில்க்ஸ்.

OTTயில் அறிமுகம்

ஃபுபார் வெப் தொடர் மூலம் OTTயில் அறிமுகம் ஆகிறார் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். பாடி பில்டராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபல நடிகராக மாறிய அர்னால்ட், ஃபுபார் என்ற வெப் தொடர் மூலம் OTTயில் அறிமுகம் ஆகிறார். அதில் சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA)வாக நடித்துள்ளார். எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடர், மே 25ஆம் தேதி நெட்ஃபில்க்ஸ்சில் ஒளிபரப்பாக உள்ளது.

Arnold is Back

அர்னால்ட் இஸ் பேக் என்ற கேப்ஷனுடன் டீசரையும் அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளது நெட்ஃபில்க்ஸ் நிறுவனம். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆக்ஷன் ஸ்டாரின் புதிய ஆக்சன் வெப் தொடரை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், டீசரே மிரட்டலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அர்னால்ட் சிகரெட் பற்ற வைத்து என்ட்ரி ஆகும் அந்த டீசர் வேற லெவல் மாசாக உள்ளது. மேலும் அவர் “ஐ அம் பேக் பேபி” என்று கூறும் பொழுது, இந்த எட்டு எபிசோடும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. காமெடி ஆக்ஷன் கதை களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் ஒளிபரப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here