இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பத்மப்ரியாவிற்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள கூறி வருகின்றனர்.

சிறந்த நாயகி

இயக்குநர் மற்றும் நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளியான “தவமாய் தவமிருந்து” படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் நடிகை பத்மப்ரியா. தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த புதுமுக நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றார். நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நாட்டியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். பத்மப்ரியா பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார். இவர் நடிப்பில் வெளியான பட்டியல், சத்தம் போடாதே, மிருகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

பிறந்தநாள் வாழ்த்து

மீண்டும் சேரனுடன் இணைந்து நடித்த “பொக்கிஷம்” என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை பத்மப்ரியா, கன்னடம், ஹிந்தி, பெங்காலி போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தங்க மீன்கள் திரைப்படமும் விருதுகளை குவித்தது.

குவியும் வாழ்த்து

தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் பத்ம பிரியா. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பத்மபிரியாவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் படங்களில் நடிக்குமாறு ரசிகர்கள் அவருக்கு அன்பு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here