இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஹிட் நாயகன்

2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து பூமிகா நடித்திருந்தார். முக்கோண காதல் கதையாக உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் சசி. ரோஜா கூட்டம் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ரகுவரன், ராதிகா, விவேக் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

கம்பேக்

பல வெற்றி படங்களுக்கு பிறகு இவர் நடித்த மெர்குரி பூக்கள், பம்பர கண்ணாலே, ரசிக்கும் சீமானே, துரோகி போன்ற படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் நடிகர் ஸ்ரீகாந்த். விஜய், ஜீவா, இலியானா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். சமீபத்தில் இவர் நடித்து வெளியான காபி வித் காதல் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். ஜெய், ஜீவா, அமிர்தா ஐயர், ரைசா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆரம்ப காலத்தில் வெற்றி நாயகனாக இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தனக்கேற்ற நிலையான வெற்றிக்காக காத்துகொண்டு இருக்கிறார். இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர்களை வைத்திருகிறார். நடிகர் ஸ்ரீகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இவரது ரசிகர்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தவாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here