குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களை வென்ற CWC

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, தற்போது நான்காவது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிஆர்பி-யில் டாப் இடத்தை பெற்று வருகின்றது.

நான்காவது சீசன்

தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, காளையன், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஆன்டிரியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் பத்து போட்டியாளர்களில் கடந்த வாரம் இயக்குனர் கிஷோர் குமார் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ஷன் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது புதிய குக்காக சிவாங்கியும் புதிய கோமாளியாக ஜிபி முத்துவும் சிங்கப்பூர் தீபமும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் முக்கியமான கோமாளி ஒருவர் வெளியேறப் போவதாக அறிவித்துள்ளார்.

வெளியேறப்போகும் மணிமேகலை

குக் வித் கோமாளியின் முக்கிய கோமாளியாக அனைவரின் மனதில் இடம்பிடித்திருப்பவர் மணிமேகலை. அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “எனது கடைசி எபிசோட் இன்று. நானே வருவேன் கெட்-அப்பில், நான் வரமாட்டேன் என்று அறிவிக்கிறேன். 2019ஆம் ஆண்டில் முதல் சீசனில் இருந்து குக் வித் கோமாளி தொடரில் எனது அனைத்து பெர்பாமேன்ஸ்களுக்கும் நீங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பை பொழிந்திருக்கிறீர்கள். அனைத்திருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்தவராக இருக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக் வித் கோமாளி மூலம் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் அதே அன்பை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அன்புடன் மணி” என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த அறிவிப்பு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here