சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் நடிகைகள் வாங்கும் சம்பளத்தின் விவரத்தை இங்கு பார்ப்போம்.

பிரபல சேனல்

தொலைக்காட்சிகளில் டாப்பாக இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற தொடர், ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது. தினம் தினம் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர், இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகிகளின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களின் சம்பள விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

வெளியான தகவல்

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து, தற்போது தமிழில் நடித்து வருகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு 15,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். சின்னத்திரை தொகுப்பாளினி டிடி யின் அக்கா பிரியதர்ஷினி எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல படங்களிலும், பல தொடர்களிலும் ஏற்கனவே நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு எபிசோடுக்கு 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தும், பாடகியாகவும் பிரபலமானவர். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கனிகா திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் ஒரு எபிசோடுக்கு 12,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. நந்தினி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகையான ஹரிப்பிரியா நடித்து வருகிறார் இவர் ஒரு எபிசோடுக்கு 15,000 சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here