அஜய் தேவ்கன் நடிக்கும் கைதி பட ரீமேக்கில் நடிகை ராய் லக்ஷ்மி ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஹிட்

2019 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நடிகர் கார்த்தி கெரியருக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கெரியருக்கும் இந்த திரைப்படம் மிகப் பெரிய தூணாக இருந்தது. சாம் சி.எஸ் இசையமைத்திருந்த கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள், பிரியாணி காட்சிகள் என அனைத்தும் பிரபலமானவை. அதுமட்டும் இல்லாமல், சென்டிமென்ட் காட்சிகளில் கார்த்தி நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.

ராய் லக்ஷ்மி டான்ஸ்

கைதி படத்தில் கார்த்தி நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். நடிகை தபு போலீஸ் அதிகாரியாகவும், அமலாபால் அஜய் தேவ்கன் மனைவியாகவும் நடிக்கின்றார். 3டியில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த படம் கைதி படத்தை போல் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான கைதி படத்தின் ரீமேக்கில் நடிகை ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனம் ஆட போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையில் இந்த பாடல் இடம்பெற இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தற்போது நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் 2 என்ற படத்திலும், ஜப்பான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜப்பான் திரைப்படம் கார்த்திக் 25 படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பொன்னின் செல்வன் 2 திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here