ஹன்சிகாவின் “லவ் ஷாதி டிராமா” இரண்டாவது எபிசோட் வெளிவரவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காதல் திருமணம்

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் திருமணமும் செய்து கொண்டார்.

இரண்டாவது எபிசோட்

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சோகைல் கதுரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. எந்த OTT தளத்தில் திருமண வீடியோ வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஹன்சிகாவின் திருமண வீடியோ “லவ் ஷாதி ட்ராமா” என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெளியானது. இந்த தொடரின் முதல் எபிசோடில் ஹன்சிகாவும் அவரது தாயும் தங்களது கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளையும் அதை எப்படி அவர்கள் சமாளித்தார்கள் என்பதையும் விவரமாக தெரிவித்தனர். இந்த எபிசோடு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அடுத்த எபிசோடுக்கான ப்ரோமோ வெளிவந்து உள்ளது. மணமகனும் மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்கு தயாராவதும், திருமணத்தில் நடக்க கூடிய சாஸ்த்ர சம்பிரதாயங்கள் குறித்து இந்த எபிசோட் தொகுத்து வழங்க இருக்கிறது. ஹன்சிகாவின் “லவ் ஷாதி டிராமாவை” பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here