விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கடும் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் வெற்றி கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் பிரபலங்களான விக்ரமன், ஷிவின், ராம், அசல் கோளாறு, ரட்சிதா, ஷரீனா, ஏடிகே ஆகியோர் ஒன்று கூடியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் தேதியோடு முடிவடைந்தது. அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இந்நிலையில் அசீம் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டிலை கைப்பற்றினார்.

குரூப் போட்டோ

தற்போது பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. ராம் வீட்டில் விக்ரமன், ஏடிகே, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, ரட்சிதா ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. இதுகுறித்து விக்ரமன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது, “ஒரு முக்கியமான ப்ராஜக்ட்காக நாங்கள் மீண்டும் சந்தித்தோம். அந்த வேலை முடிந்துவிட்டது, அதற்கான மற்ற பணிகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு அப்டேட் தருவதாகக் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here