ஜீ தமிழில் இன்று முதல் சீதா ராமன் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் பல ப்ரோமோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரோஜா தொடர்

சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ரோஜா தொடருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பது தான். ரோஜா தொடரில் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். அவர் நடிக்கும் புதிய தொடர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது . சீதா ராமன் என்ற தொடரின் பல ப்ரோமோக்கள் வெளிவந்து உள்ளது.

நல்ல ஜோடி

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீதா ராமன் தொடருக்கான ஹீரோ மற்றும் ஹீரோயின் இண்ட்ரொடக்ஷன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்று முதல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இன்றைய எபிசோடில் குலசேகரபட்டினம் என்ற ஊரில் சீதா தனது குடும்பத்துடன் வாழ்ந்து வர தசரா பண்டிகைக்காக அவளது குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வருகின்றனர். மறுபக்கம் மகாலட்சுமி அறிமுகம் செய்யப்படுகிறாள். தன்னுடைய மகன் ராமிற்காக அழகான பெண்ணை பார்த்து இருக்க மகாலட்சுமியின் தொழில் எதிரி அந்தப் பெண்ணை கடத்தி விடுகிறான். அவர்களிடமிருந்து மகாலட்சுமி அந்தப் பெண்ணை மீட்டு அழைத்து வருகிறாள்.இப்படி பல சுவாரஸ்யம் கலந்த தொடராக இன்று தொடங்க உள்ள இந்த தொடரை காண இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here