இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து உள்ளது. அதில் அவரது மகளைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னணி இயக்குநர்

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் முருகதாஸ். அதன் பிறகு ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களின் லிஸ்டில் ஒருவராக சேர்ந்தார். இவரின் ரமணா படத்திற்காக சிறந்த டயலாக் ரைட்டர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் தட்டிச் சென்றார். இவர் இயக்கிய ஸ்பைடர், சர்கார், போன்ற படங்கள் வேற லெவல் ஹிட்டானது.

ஹீரோயின் ரெடி

விஜயகாந்த், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இயக்குநராக மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் பல படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார். 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இயக்குநர் முருகதாசுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றது. ஏ ஆர் முருகதாஸின் மகள் நன்றாக வளர்ந்துவிட்டதாகவும், தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here