நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மொட்டை மாடியில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைடலாகி வருகிறது.

தொடரில் பிஸி

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பாவாக ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சில படங்களில் நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் பிரபலமாக உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை ரேஷ்மா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல், ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீதாராமன் தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்தத் தொடரில் சன் டிவியில் பிரபலமான ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்காரி சீதாவாக நடிக்கிறார்.

அந்நியன் பாட்டுக்கு டான்ஸ்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகர் ரேஷ்மா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். எப்போதும் இவர் வெளியிடும் போஸ்டுகளுக்கு பல லைக்ஸ் குவிந்து வரும். அதேபோல் தற்போது, நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்நியன் படத்தில் இடம் பெற்றுள்ள “ஐய்யங்காரு வீடு அழகே” என்ற பாடலுக்கு மொட்டை மாடியில் இழுத்து சொருகிய புடவையுடன் பரதநாட்டியம் ஆடிய வீடியோ பல லைக்ஸ் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here