பீட்டன் ரீட் இயக்கத்தில் பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் Ant-Man and the Wasp: Quantumania திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கின்றது.

ஆர்வக்கோளாறு

பீட்டன் ரீட் இயக்கத்தில், பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் தான் Ant-Man and the Wasp: Quantumania. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது. மகளின் ஆர்வக்கோளாறால் குவாண்டம் ரியலத்துக்குள் குடும்பமே சிக்கிக்கொள்ள, வில்லன் காங்கிடம் சிக்கும் மகளை ஆன்ட் மேன் தனது மனைவி வாஸ்ப் உடன் சேர்ந்து எப்படி மீட்டார் என்பது தான் இந்த படத்தின் கதை.

எறும்பு கூட்டம்

கேப்டன் அமெரிக்காவுடன் சேர்ந்து உலகத்தை காப்பாற்ற சண்டைப் போட்டாலும், சாதாரண மனிதனாக வாழும் ஆன்ட் மேன் ஹீரோ பால் ராடை சிலர் ஸ்பைடர் மேன் என நினைத்துக் கொண்டாலும், அதை பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறார். பெரிய ஆக்‌ஷன் பிளாக் மாட்டவில்லையே, வாழ்க்கை போரடிக்குதே என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மகள் கேஸி செய்யும் ஆர்வக்கோளாறான விஷயத்தால் ஆன்ட் மேன், வாஸ்ப் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் குவாண்டம் ரியலத்துக்குள் சிக்குகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு அவரது மகளையும், உலகத்தையும் காப்பாற்றினாரா? என்பது தான் ஆன்ட் மேன் குவாண்டமானியா படத்தின் கதை. எறும்பா இருந்தாலும் இரும்பா இருக்கணும், குட்டியா இருந்தாலும் வெட்டியா இருக்கக் கூடாது போன்ற பஞ்ச் வசனங்களும் அடிக்கடி வந்து குழந்தைகளை சிரிக்க வைக்கிறது. இந்த வீக் எண்டு கண்டிப்பாக குழந்தைகளுடன் Ant-Man and the Wasp: Quantumania பார்க்கலாம் என்பது தான் ரசிகர்களின் கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here