கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி நடிகர் யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி கூறி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகர் யோகி பாபு.

கிரிக்கெட் மீது ஆர்வம்

ஒருநாள் கிரிக்கெட் கோப்பை 20 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு உலக கோப்பைகளையும் வென்ற இந்திய அணியின் கேப்டனாக விளங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் யோகி பாபு . காமெடி நடிகரானே இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் கூர்கா, தர்ம பிரபு, மண்டேலா போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், காமெடியாகவும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். யோகி பாபு கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சூட்டிங் ஸ்பாட்டுகளில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இவர் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தால் நடிகர் விஜய்யும் இவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.

தோனியின் பரிசு

கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் எம் எஸ் தோனி யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யோகி பாபுவும் தோனிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து உள்ள யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பேட் தோனி பயிற்சியின் போது பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் “Best wishes Yogi Babu” என்று எழுதி அதில் கையெழுத்தும் போட்டு பரிசளித்துள்ளார் எம் எஸ் தோனி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here