விஜய் டிவியில் ” தென்றல் வந்து என்னை தொடும்” தொடரில் பிக் பாஸ் ஜூலி அறிமுகமாகி உள்ளார்.

தொடரில் அறிமுகம்

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் தொடர்களில் ஒன்று தான் “தென்றல் வந்து என்னை தொடும்” தொடர். இந்த தொடரில் வெற்றி மற்றும் அபி கதாபாத்திரத்தில் வினோத் மற்றும் பவித்ரா நடிக்கின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி அறிமுகமாகி உள்ளார்.

வில்லியாக ஜூலி

ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என்று மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி சில படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது “தென்றல் வந்து என்னை தொடும்” தொடரில் பல திருப்பங்கள் வந்திருக்கும் நிலையில், 6 வருடங்களுக்கு பிறகு ஹீரோயின் அபி கலெக்டராக மாற, வெற்றி ரவுடியாக மாறுகிறார். குடித்துவிட்டு தெருவில் திரியும் வெற்றியை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கிறார் ஜூலி. வெற்றியை ஆரம்பத்தில் இருந்து ஒருதலையாக காதலித்து வரும் கேரக்டரில் ஜூலி நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜூலி இதில் வக்கீலாகவும் இருக்கிறார். அவருடைய தந்தை எதற்காக வெற்றியிடம் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்க, அவருடைய உதவியால் தான் நான் அட்வகேட் ஆனேன் என்று ஜூலி கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. சின்ன திரையில் அறிமுகமாகியுள்ள ஜூலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here