சமூக வலை தளத்தில் நடிகை நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சன் டிவி தொடர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கினார் நட்சத்திரா நாகேஷ். இத்தொடரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பாப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அந்த தொடரில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை நட்சத்திரா நாகேஷ். அதன்பிறகு,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அசத்தல் புகைப்படங்கள்

சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல், ஹே சினாமிகா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளி திரையிலும், தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார் நட்சத்திரா. 2021 ஆம் ஆண்டு ராகவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நட்சத்திரா, தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி போட்டோஷீட் புகைப்படங்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here