நடிகர் விஜய், சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பூவே உனக்காக திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகின்றது.

விக்ரமன் படம்

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் மற்றும் சங்கீதா இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இன்றுடன் இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இன்றும் மனதில்

1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் கெரியரை டோட்டலாக மாற்றியது. பிளாக்பஸ்டர் படமாக அமைந்த பூவே உனக்காக திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ. ராஜ்குமார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும், இன்று கேட்டாலும் புதியது போல் இருக்கும் வகையில் அவரது இசை அமைந்திருந்தது. எத்தனை ஹிட் படங்கள் விஜய் கொடுத்தாலும் ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் பூவே உனக்காக திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றுடன் இந்த படம் வெளிவந்து 27 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #27YearaofPooveUnakaaga என்கிற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here